Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 20 லட்ச ரூபாய் மேல் பணம் பறிமுதல்

மார்ச் 10, 2021 12:59

காஞ்சிபுரம் : இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டதில் 13 இடங்களில் 20 லட்சத்து 67 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு  பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தினந்தொறும் ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் லட்சக்கணக்கான பணம், தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், சோமங்கலம் உள்ளிட்ட 13 இடங்களில் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் எடுத்துவரப்பட்ட 20 லட்சத்து 60 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பறிமுதலுக்கு யாரு ஒரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சி அல்லது யாதொரு தேர்தல் பிரச்சாரத்திற்கு தொடர்பு இல்லை என்று கண்டறியும்போது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அல்லது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நபரிடம் அத்தகைய ரொக்கம் அல்லது பொருளை விடுவிக்க உடனடியாக இக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்