Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக தொழில்நுட்பப்பிரிவு ஆலோசனைக்கூட்டம்

மார்ச் 10, 2021 01:01

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் ஒன்றியத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சதிஷ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனை வழங்கினார். 

இதில்  சட்ட மன்ற உறுப்பினர் மதனந்தபுரம் பழனி,கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர் செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜீ, அக்ரி நாகராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்