Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வாழ்வாதாரம் பாதிப்பு - மேடை நாடகக் கலைஞர்கள் மனு

மார்ச் 10, 2021 01:11

புதுக்கோட்டை : தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக பாடகரும், நடிகருமான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மேடை நாடகக் கலைஞர்கள் புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேடை நாடகத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

பொதுவாக மேடை கலைஞர்களுக்கு வருமானம் தரக்கூடிய மாதமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் மட்டுமே திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் நிகழ்ச்சிகள் அதிகமாக இருக்கும்.தற்போது காவல்துறையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி இரவு 10 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடிக்க சொல்வதாலும், ஒரு சில இடங்களில் அனுமதி கிடைக்காமல் நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாலும் மேடை கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் மனு அளித்தனர்.

 ஐந்து வருடங்களுக்கு 3 தேர்தல்களை சந்திப்பதால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே மேடை கலைஞர்கள் மட்டுமின்றி ஒலிபெருக்கி அமைப்பாளர்கள், மேடை அமைப்பாளர்கள், உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனைத்து தொழிலாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி விதிமுறைகளுக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என பாடகரும், நடிகருமான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி உள்ளிட்ட மேடை கலைஞர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.மேலும் திருவிழாக்களில் தற்போது நடைபெறும் நிகழ்ச்சிகளை இரவு ஒரு மணி வரை நடத்திக்கொள்ள காலநீட்டிப்பு செய்யவும், நாடக கலைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தலைப்புச்செய்திகள்