Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 103 வயது மூதாட்டி

மார்ச் 10, 2021 03:35

பெங்களூரு:இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.  இதன்படி, சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் இந்த தடுப்பூசியை பெற்றனர். இதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

நாட்டில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.  இதுபோக இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூடான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் அவை வினியோகிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வசிக்கும் ஜே. காமேஷ்வரி என்ற 103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.

இவர் இந்தியாவின் மிக வயது முதிர்ந்தவர் என தரவுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது. நாட்டில் கடந்த மார்ச் 1ந்தேதியில் இருந்து அடுத்த கட்ட தடுப்பூசி போடும் பணிகள் மாநிலங்கள் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2.40 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்