Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக வேட்பாளர்  ஊர்வலத்தின்போது கார்-அரசுப் பேருந்து மோதியதால் பரபரப்பு 

மார்ச் 13, 2021 06:51

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக வேட்பாளர்  ஊர்வலத்தின்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி கார்-அரசுப் பேருந்து மோதியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் அதிமுக கட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளராக மான்ராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பிய மான்ராஜ் ஊரில் உள்ள அரசியல் மற்றும் சமுதாய தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கிளம்பும்போது வேட்பாளர் பயணிக்கும் வாகனம்  பின்னால் வந்த வாகனமும் அரசுப் பேருந்து மோதி கொண்டதால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு பேருந்து ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருதரப்பு வாக்குவாதத்தால் பேருந்தில் பயணித்த பயணிகள் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக என்ன செய்வதென்று தெரியாமல் பேருந்திலேயே அமர்ந்திருந்தனர். 

நீண்ட நேரத்திற்குப்பின் பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு அவ்வழியாக வந்த வேறு ஒரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்