Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மம்தா மீது நடந்தப்பட்டதற்கான தாக்குதலுக்கு ஆதாரம் இல்லை: தேர்தல் பார்வையாளர்கள்

மார்ச் 14, 2021 06:47

புதுடெல்லி:  மம்தா பானர்ஜி மீது திட்டமிட்டு தாக்குதல் நடந்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என தேர்தல் பார்வையாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில தலைமைச் செயலாளருக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டிருந்தது.

மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இதற்கிடையே நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அடையாளம் தெரியாத 5 நபர்கள் தன்னை பிடித்து தள்ளியதாக அவர் புகார் கூறி இருந்தார். இதில் அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. பல்வேறு சிகிச்சைகளுக்கு பிறகு மம்தா உடல் நலம் தேறியதால் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மம்தா தாக்கப்பட்டதற்கு பா.ஜனதாவின் சதிதான் காரணம் என்று அவரது கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் மாறி மாறி தேர்தல் கமி‌ஷனிடம் முறையிட்டது. சம்பவத்தன்று பதிவான வீடியோ பதிவை தேர்தல் கமி‌ஷன் வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி இருந்தது. மம்தாபானர்ஜி தாக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில தலைமைச் செயலாளருக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கை மேலோட்டமாக இருக்கிறது என்றும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மேற்கு வங்காள அரசுக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு போலீஸ் பார்வையாளர் விவேக் துபே மற்றும் பொது பார்வையாளர் அஜய்நாயக் ஆகியோரை தேர்தல் கமி‌ஷன் நியமித்தது.

தலைப்புச்செய்திகள்