Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரோட்டராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

மார்ச் 16, 2021 09:45

புதுக்கோட்டை: மௌண்ட் சியோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கதலைவர் பொறியாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவாஜி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்ட செயலாளர் ஜெய் பார்த்தீபன், மௌண்ட் சியோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர் டாக்டர்.ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி சபரிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரோட்டராக்ட் சங்க புதிய தலைவராக பிரபு, செயலாளராக அபிஷேக் குமார், பொருளாளராக பழனியப்பன் உள்ளிட்ட ஆட்சி மன்றக் குழுவினர் பணியேற்றுக்கொண்டனர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது.

முன்னதாக ரோட்டராக் சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் கெனீஸ் கிளானிங் தாஸ் வரவேற்றார். பேராசிரியர்கள் டாக்டர். மோகன், டாக்டர். மணிகண்டன், விஜய பிரகாஷ் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்விற்காக ஏற்பாடுகளை சங்கத்தின் ரோட்டராக்ட் சேர்மன் ஜான் பிரபு மற்றும் ரோட்டராக்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவாக ரோட்டராக்ட் செயலாளர் சபாபதி நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்