Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 16 ஆயிரம் வங்கிகள் 2-வது நாளாக மூடப்பட்டன

மார்ச் 16, 2021 10:22

சென்னை:இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி பணியாளர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.சுமார் 10 லட்சம் பணியாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் நாடுமுழுவதும் பொதுத்துறை வங்கிகளின் பெரும்பாலான கிளைகள் மூடி கிடந்தன. வங்கி சேவை, பணபரிமாற்றங்கள், காசோலை பரிவர்த்தனை என அனைத்து விதமான சேவைகளும் முடங்கின.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடுமுழுவதும் 16 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 2 கோடி காசோலைகள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தன. இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக நாடு முழுவதும் நீடித்து வருகிறது.தமிழகத்தில் 16 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டு உள்ளன. வங்கி சேவை முடங்கி உள்ளதால் காசோலை பரிவர்த்தனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளன.

சென்னை காசோலை பரிவர்த்தனை நிலையத்தில் நேற்று மட்டும் ரூ.5 ஆயிரத்து 150 கோடி மதிப்பிலான சுமார் 60 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கி இருந்தது. இன்றும் இந்த பணி பாதிக்கப்பட்டு உள்ளது.கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் பல்வேறு ஏ.டி.எம்.களில் 2 நாட்கள் பணம் நிரப்பப்படவில்லை. இதேபோல் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தால் வங்கிகள் செயல்படாததால் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக ஏராளமான ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்