Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு ஏழைத்தாயின் மகனைத் திட்ட வச்சுட்டாரே இந்த ஆளு: ராஜூமுருகன்

ஏப்ரல் 09, 2019 06:09

மதுரை: மதுரை தொகுதியில் போட்டிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் பேசுகையில் 

“சு.வெங்கடேசனுக்கு ஓட்டுக் கேட்பது நானும், ஒட்டுமொத்த இந்தியாவும் கம்யூனிச இயக்கங்களுக்கு பட்டிருக்கிற நன்றிக்கடன். பல தொகுதிகளில் இவரெல்லாம் வேட்பாளரா என்று நினைக்கக்கூடிய சூழலில் இவர் நம் வேட்பாளர் என்று பெருமைப் படக்கூடிய ஒருவராக மதுரைத் தொகுதியில் சு.வெங்கடேசன் இருக்கிறார்.  

25 ஆண்டுகளுக்கு மேலாக, இலக்கிய பணிகளில், அரசியல் மேடைகளில், களப் போராட்டங்களில் தனது வாழ்வை அர்பணித்த பெரும் போராளி சு.வெங்கடேசன். கீழடி விஷயத்தில் உரக்க குரல் கொடுக்கும் தமிழர், உத்தப்புரம் சுவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று போராடக்கூடிய நாயகன். எனவே, அவருக்கு எதிராக விழக்கூடிய ஒவ்வொரு ஓட்டும் செல்லாத ஓட்டுதான் என பேசி வாக்கு சேகரித்தார்.

தலைப்புச்செய்திகள்