Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகரித்து வரும் கொரோனா - பிரதமர் மோடி இன்று ஆலோசனை

மார்ச் 17, 2021 05:43

புதுடெல்லி:இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 21-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மாநிலத்தில் எந்த அளவுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தடுப்பூசி செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

தலைப்புச்செய்திகள்