Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ம.க. தனித்து போட்டி

மார்ச் 17, 2021 05:45

புதுச்சேரி:தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. - பா.ஜனதா- பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.புதுவையிலும் இக்கூட்டணி நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புதுவை பா. ஜனதா கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாரதிய ஜனதா 9 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.

பா.மக.வுக்கு 3 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என அக்கட்சி மாநில அமைப்பாளர் தன்ராஜ் வற்புறுத்தி வந்தார். ஆனால் பாரதிய ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு தொகுதி கூட வழங்கவில்லை.இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து புதுவை பா.ம.க. விலகியது. தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக 9 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மண்ணாடிப்பட்டு - வெங்கடேசன், அரியாங்குப்பம் - சிவராமன், மங்கலம் - மதியழகன், தட்டாஞ்சாவடி -கதிர்வேல், லாஸ்பேட்டை நரசிம்மன், மணவெளி - கணபதி, இந்திரா நகர் வடிவேல், ஊசுடு (தனி)- கலியபெருமாள், திருபுவனை (தனி) - சாண்டில்யன்.

தலைப்புச்செய்திகள்