Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியின் ஆலோசகர் சின்ஹா திடீர் ராஜினாமா

மார்ச் 17, 2021 05:49

புதுடெல்லி :பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக பதவி வகித்து வந்தவர் பி.கே. சின்ஹா (வயது 65). இவர் திடீரென தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவர் 1977-ம் ஆண்டின் உத்தரபிரதேச மாநில ஒதுக்கீடு ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்தவர்.

இவர் பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக குறுகிய காலம் பதவி வகித்ததைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அந்த பதவியில் தொடர்ந்தார்.4 ஆண்டு காலம் அதிகாரமிக்க மத்திய மந்திரிசபையின் செயலாளராகவும் இவர் பதவி வகித்து இருக்கிறார்.பிரதமரின் பதவிக்காலம் வரையில் அல்லது அடுத்த உத்தரவு வரையில், இரண்டில் எது முதலில் வருகிறதோ அது வரையில் அவரது பதவி தொடரும் என்று நியமன உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிய வந்துள்ளது.ஆனால் இதற்கு மாறாக அவர் தாமாகவே பிரதமரின் முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்