Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகை விந்தியா 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்

மார்ச் 17, 2021 08:51

சென்னை:அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா முதல்கட்டமாக நாளை முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.நாளை  மாலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

வருகிற 19-ந்தேதி மாலையில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 20-ந்தேதி காலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, பழனி ஆகிய பகுதிகளிலும், மாலையில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.21-ந்தேதி (ஞாயிறு) காலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி பகுதிகளிலும், மாலையில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
 

தலைப்புச்செய்திகள்