Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் வேட்பு மனுதாக்கல்

மார்ச் 17, 2021 09:10

திருச்சி  :மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ண கோபால்  வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் அமமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ கட்சிகளின் கூட்டணி வேட்பாளரும், தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால் தனது  வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆண்டவர் கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான இருச்சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என பிரமாண்ட பேரணியாக வந்த கிருஷ்ணகோபால், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஆர்.பார்த்திபனிடம் தனது வேட்பு மனுவை சமர்பித்தார். பேரணிக்கு முன்பாக தாரைத்தப்பட்டைகள் முழங்கிய போது, தேமுதிக கட்சி தொண்டர் ஒருவர் முரசு ஒன்றில் பறைசாற்றி தேமுதிக வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார்.

தலைப்புச்செய்திகள்