Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் மன்சூர் அலிகான்

மார்ச் 17, 2021 02:54

கோவை:தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு கிடைக்காததால், சுயேட்சையாக களம் இறங்குகிறார் மன்சூர் அலிகான்.
 

தலைப்புச்செய்திகள்