Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு காஷ்மீரில் ஒரு வெளியாள் கூட சொத்து வாங்கவில்லை: அரசு அறிக்கை

மார்ச் 18, 2021 07:43

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமை ரத்து செய்யப்பட்டு, அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை ஜம்மு காஷ்மீரில் ஒரு வெளியாள் கூட சொத்து வாங்கவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் குழு ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தகவலில், சிறப்புரிமை ரத்து செய்யப்பட்ட பிறகு 22 ஆயிரம் அரசு வேலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஆள் எடுக்கவில்லை என்றும், வெளியாள் ஒருவர்கூட ஜம்மு காஷ்மீரில் இதுவரை சொத்து வாங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஜூன் முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியில் உள்ள ஜம்மு காஷ்மீர் 2019 ஆகஸ்ட் 6ம் தேதி சிறப்புரிமைகள் நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. அப்போது 50 ஆயிரம் அரசுப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட வேறொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, சிறப்புரிமை நீக்கப்பட்ட பிறகு அங்கிருந்து புலம் பெயர்ந்த 520 பேர் காஷ்மீர் திரும்பினர் என்று கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்