Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அகமதாபாத்தில் பேருந்து போக்குவரத்திற்கு தடை..ஜிம், பூங்கா,விளையாட்டு கிளப் உள்ளிட்டவை மூடல் 

மார்ச் 18, 2021 07:49

அகமதாபாத் : கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அகமதாபாத்தில் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவுதலின் வேகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன

குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி (AMTS, BRTS) வைத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல், அகமதாபாத் நகரத்தில் உள்ள அரசு, தனியார் ஜிம்கள், பூங்காக்கள், தீம் பார்க்குகள், விளையாட்டு கிளப்கள், விளையாட்டு மைதானங்களும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்