Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை

மார்ச் 19, 2021 03:55

புதுடெல்லி:கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந்தேதி இந்தியா தொடங்கியது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதையடுத்து 2-ம் கட்டமாக மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

 அந்த வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மாலை 7 மணி வரை இந்தியாவில் இதுவரை மொத்தம் 3 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரத்து 259 கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் இன்று மட்டும் 17,83,303 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்