Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுக்கோட்டை அருகே 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மார்ச் 20, 2021 09:40

புதுக்கோட்டை: தமிழக சட்டமன்ற தேர்தலை ‘100 சதவீதம் வாக்குபதிவு, 100 சதவீதம் நேர்மையுடன் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் எண்ணமும், விருப்பமும் ஆகும். 

எனவே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறதா? என்பதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து சுற்றியும், வாகன தணிக்கைகள் நடத்தியும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியை மீறி புதுக்கோட்டை அருகே தட்சங்குறிச்சியில் நடைபெற்ற வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாததால் 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்