Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போடியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் சாலை மறியல்

மார்ச் 20, 2021 01:15

தேனி: போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகமலை ஊராட்சியின் ஒரு பகுதியில் சாலை அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பெரியகுளம் பகுதியில் சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது. தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகமலை ஊராட்சியின் ஒரு பகுதியான ஊரடி,  ஊத்துக்காடு, குறவன் குழி, கருங்கல் பாறை, அலங்காரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதியை இதுவரை எந்த அரசாங்கமும் 70  ஆண்டுகளாக செய்து தராத நிலையில்,  சுதந்திர இந்தியாவில் சாலை வசதி இல்லாத கிராமங்களாக வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவித்தனர் அப்பகுதி மக்கள்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறு இன்று பெரியகுளம் அருகே உள்ள சோத்துபாறை அணைப்பகுதியில் பெரியகுளம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் சாலை போடுவதற்கு தொடர்ந்து வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த முறை மலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து, வாக்கு பதிவு அன்று ஒருவர் கூட வாக்கு பதிவை செலுத்தாமல் வாக்கு பெட்டியை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும், தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மலை கிராம மக்களிடம் பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் மற்றும் பெரியகுளம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து 5 மணி நேரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெரியகுளம் வனச்சரக அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சாலை அமைக்க உரிய உத்தரவை பெற்று தருவதாகவும்,

தற்பொழுது போராட்டத்தை கைவிட கோரியும் அங்கிருந்தவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இதனை தொடந்து போராட்டத்தில் ஈடுபட்ட மலை கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். மேலும் தங்களுக்கான சாலை வசதி பணிகள் துவக்கும் வரை தேர்தலை புறக்கணித்து வாக்கை செலுத்த போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்