Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதலமைச்சரை எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாதவர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி 

மார்ச் 20, 2021 01:32

அரியலூர்  : முதலமைச்சராக இருப்பவரை எப்படி பேச வேண்டும் என்பது கூட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை  என அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தாமரை ராஜேந்திரனை ஆதரித்து பேசிய போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக தெரிவித்தவுள்ளார். அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தாமரை ராஜேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் அதிமுகவில் நிர்வாகியின் மகன் அரசியலுக்கு வரலாம். ஆனால் தலைவராக முடியாது.  தலைவராக வேண்டும் என்றால் மக்களின் செல்வாக்கு உள்ளவர்கள் தான் தலைவராக முடியும் என்று கூறினார்.முதலமைச்சராக இருப்பவரை எப்படி பேச வேண்டும் என்பது கூட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. அரசியலில் மதிக்கத் தெரிந்த தலைவர்கள் தான் அதிமுக கூட்டணியில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு முதலமைச்சர் உதவி மையத்திற்கு 1100 என்ற எண்ணிற்கு எந்த துறைகளிலும் மக்களுக்குள்ள கோரிக்கைகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும்,  

இதுவரை 1100 என்ற முதலமைச்சரின் உதவி மைய எண்ணிற்கு  85 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளதாகவும்,  அதன் மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பின்னர் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான பணிகள், நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள், மேம்பாலங்கள், கிராம சாலைகள் என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்ற பட்டுள்ள்ளதை சுட்டிக்காட்டி பேசினார். 

எனவே அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாய் அவர்  கேட்டுக் கொண்டார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு கல்வி கடன் ரத்து, குடும்பப் பெண்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை, ஆறு இலவச சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தலைப்புச்செய்திகள்