Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரவு நேர ஊரடங்கு?: அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரை

மார்ச் 20, 2021 02:33

பெங்களூரு :இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்பின்னர் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியதும் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது.இதற்கிடையே கொேரானாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, முன்கள பணியாளர்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அளவில் கொரோனா வைரஸ் குறைந்தளவே பதிவாகி வந்தது. இதனால் மத்திய அரசும், மக்களும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதத்தை போல, இந்த ஆண்டு மார்ச் மாதமும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை தொடங்கி விட்டதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கர்நாடக அரசின் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார்.

மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவத்தொடங்கியுள்ளது. இதனால் குறிப்பாக கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் பீதியடைந்துள்ளன. மராட்டியத்தில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரை செய்து கொரோனா தடுப்பு ஆலோசனை நிபுணர் குழு அரசுக்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்