Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஷ்யாவின் தடுப்பூசிகள் தயாரிக்க இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

மார்ச் 20, 2021 02:35

புதுடெல்லி:உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி-யை 20 கோடி எண்ணிக்கையில் தயாரித்து மூன்றாவது காலாண்டு முதல் விநியோகிக்க, இந்திய மருந்து நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் போட்டுள்ளது.ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தானது 91.6% பயனளிப்பதாக லான்செட் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. அனைத்து வயது மக்களிடமும் நிலையான மற்றும் வலுவான பாதுகாப்பை வழங்குவதாக அதில் தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை அங்கீகரிக்கப்பட்ட மருந்து நிறுவனங்களும்,

மருத்துவ பல்கலைக்கழகங்களும் இணைந்து தயாரித்து வருகின்றன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலக சுகாதார மையத்தின் அனுமதியை பெற்று பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில் உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசியான ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி, தற்போது 50 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஸ்டெலிஸ் பயோபார்மா என்ற நிறுவனத்துடன் ரஷ்ய நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியாவில் இது நான்காவது ஒப்பந்தம் ஆகும்

கொரோனா தடுப்பூசி பொதுவாக இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் 20 கோடி மருந்துகளை தயாரிக்க உள்ளனர். ஆரம்ப ஒப்பந்தத்தை காட்டிலும் கூடுதல் அளவில் மருந்துகளை விநியோகிக்க வேலை செய்வோம் என இந்திய மருந்து நிறுவனமான ஸ்டெலிஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியானது 3-வது காலாண்டிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்