Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் தஞ்சையை தக்கவைக்குமா திமுக?

மார்ச் 20, 2021 03:06

தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது. இதில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 178 தொகுதிகளிலும், தி.மு.க.173 தொகுதிகளிலும் போட்டியிடு கின்றன. பிரதான கட்சிகளான இந்த 2 கட்சிகளும் இம்முறை 134 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை 8 சட்டமன்ற தொகுதிகளில் தஞ்சை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய 4 தொகுதி களில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே பலப்பரீட்சை நடக்கிறது. இதில் தஞ் சையில் அறிவுடைநம்பி (அ.தி.மு.க)- டி.கே.ஜி.நீலமேகம் (தி.மு.க) இடையே போட்டி நடைபெறுகிறது. 

ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் (அ.தி.மு.க)- ராமச்சந்திரன் (தி.மு.க) இடையே போட்டி நடக்கிறது. இதில் ஏற்கனவே கடந்த தேர்தலில் இவர் கள்  2 பேரும் நேருக்கு நேர் மோதிய தில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். பேராவூரணியில் திருஞான சம்பந்தம் (அ.தி.மு.க)-அசோக்குமார் (தி.மு.க) இடையேயும். திருவிடை மருதூரில் வீரமணி (அ.தி.மு.க)-கோவி.செழியன் (தி.மு.க) ஆகியோர் எதிர்த்து களம் காணுகின்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 1962ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். தஞ்சாவூர் எப்போதுமே திமுகவின் கோட் டையாகவே இருந்து  வந்துள்ளது. இங்கு 9 முறை திமுக வென்றுள்ள நிலையில் காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற் றுள்ளன.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.கே.ஜி நீலமேகம், மறைந்த டி.கே கோவிந்தன் என்பவரின் மகன். டி.கே.கோவிந்தன்  கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்ததோடு மிசாவி லும் கைது செய்யப்பட்டவர். டி.கே.ஜி.நீலமேகமும் ஆரம்ப காலம் முதலே தி.மு.க-வில் இருந்து வருவ தோடு இளைஞரணியில் பல பொறுப்புகளை வகித்தவர். தற்போது தஞ்சை மாநகரத்தின் செயலாளராக வும் உள்ளார்.

தனது தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை உடனுக்குடன் தீர்த்து தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதால் தொகுதி மக்களிடம்  நீலமேகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததையடுத்து இந்த முறையும் அவருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக முன்னாள் அமைச்சரும் கழக மாநில வர்த்தகர் அணி தலைவருமான  உபயதுல்லாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று தனது அடுத்தக்கட்ட பணிகளை தொடங்க ஆரம்பித்தார் நீலமேகம். 

இந்தமுறையும் அவர் வேட்பாளராக தேர்வு செய்தது குறித்து கூறும்போது, என்னை இரண்டாவது முறையாக தஞ்சை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்த தலைவர் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.  பத்தாண்டு கால அடிமை ஆட்சியை தூக்கி யெறிய, தமிழகம் சிறக்க, கழகத் தலைவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க ஓய்வின்றி உழைப்போம் என்று கூறிய அவர், வாக்கு கேட்டு செல்லும் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் காட்டுகின்ற அன்பும் வரவேற் பும் அவர்கள் மாற்றத்திற்கு தயாராகி விட் டதை காட்டுகிறது என்று கூறினார்.

தேர்தல் களத்தில் கம்பீரமாக இறங்கி பிரசாரம் செய்துவரும் நீல மேகம் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ள அனைத்து வாக்குறுதி களையும் மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிக்கிறார்.

தஞ்சாவூர் மக்கள் சாதி, மதம் கடந்து நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். ஏழை, எளிய மக்களிடத்தில் எளிதில்  பழக்கூடியவராக விளங்கு கிறார் டி.கே.ஜி.நீலமேகம். அதோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அதே தொகுதியில் அவருக்கு மீண்டும் போட்டியிட போட்டியிட வாய்ப்பு கிடைத்ததால் வெற்றி என்று உறுதி செய்யப்பட்டது என்றே கூறுகிறார்கள் அத்தொகுதி மக்கள். 

அவர் தனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததுதான் அவருக்கு இப் போதும் வாய்ப்பு கிடைக்க காரணம் என்கிறார்கள். அதாவது,  * திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தஞ்சை மாவட் டத்தின், தனது தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி  மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

* தஞ்சை மாவட்டத்தில் தனது தொகுதிக்குட்பட்ட மூத்த முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்து வருகிறார். 
* தன் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தானே நேரில் குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார்.
* சாலை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

* தஞ்சை மாரியம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் அமைத்து தந்துள்ளார்.
* கன மழையால் வீடு இழந்தவர் களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.
* வீட்டுமனை பட்டா இல்லாத மக்களுக்கு, பட்டா வழங்க ஏற்பாடு செய்து வாங்கி கொடுத்துள்ளார்.

* விவசாயிகளுக்கு எதிரான மத்திய வேளாண் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக மாநில  அதிமுக அரசு களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.

* மாணவர்களின் எதிர்காத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் தொடர்ந்து  கண்டன போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு வகையில் எதிர்ப்பு களை தெரிவித்துள்ளார்.

* மின் கட்டண கொள்ளையை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளார். 
* பெட்ரோல் டீசல் மற்று கேஸ் உயர்வை கண்டித்து தஞ்சை மாநகர திமுக சார்பாக மாபெரும் சைக்கிள் பேரணி நடத்தியுள்ளார்.

* கடந்த ஒரு மாதம் முன்பு தஞ்சை மேல அலங்கம் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று குரங்குகளால் தூக்கிச்செல்லப்பட்டு 8 நாளே ஆன குழந்தை  உயிரிழந்ததை தொடர்ந்து தஞ்சை மாவட்ட வனத்துறை அதிகாரிகளுடன் பேசி உடனடியாக தஞ்சை மாநகரம் கீழவாசல் பகுதியில் சுற்றித்திரிந்த 30 க்கும்  மேற்ப்பட்ட குரங்குகள் பிடிக்க தகுந்த ஏற்பாடு செய்துள்ளார்.

* மத்திய வேளாண் அவசர சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட் டத்திற்கு ஆதரவாக இன்று அனைத் துக்கட்சி சார்பாக தஞ்சை  பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகியுள்ளார்.
* கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார். 

இப்படி அவர் செய்த பணிகளை கூறிகொண்டே போகலாம் என்று கூறும் அத்தொகுதி மக்கள் கூடவே சில கோரிக்கைகளையும் முன் வைக் கிறார்கள். அதாவது, தஞ்சை பகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் பலவாக இருந்தாலும், அதில் முக்கியமானதாக இருப்பவைகள் சில.. 

அதாவது, வயல்கள் சூழ் ஊரான தஞ்சையில் பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் படித்த இளை ஞர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்னை, பெங்களூரு, திருச்சி என மற்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது. அதனால் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 
அதோடு, விளைபொருட்களை மதிப்புக் கூட்டக் கூடிய ஆலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங் குகள் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

அதற்கு உடனடியாக ஒரு தீர்வு வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்றும், தரத்தை உயர்த்த வேண்டும் மேலும் சட்டக்கல்லூரி ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும். மீண்டும் டிகேஜி.நீலமேகம் வெற்றிப்பெற்றால் இதை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்கிறார்கள் அந்த தொகுதியை சேர்ந்தவர்கள். எனவே திமுக மீண்டும் தஞ்சையை தக்க வைக்கும் என்றே பரவலாக பேசப்படுகிறது. 

 

தலைப்புச்செய்திகள்