Tuesday, 25th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

187 வகை வண்ணத்து பூச்சிகள்: கேரள வனபகுதிகளில் கண்டு பிடிப்பு

மார்ச் 21, 2021 07:41

திருவனந்தபுரம்: புதிய வகை வண்ணத்து பூச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டதால் கேரள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கேரளாவில் ஏராளமான வன பகுதிகள் உள்ளன. இதில் வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, காட்டாக்கடை, பத்தனம்திட்டா காட்டு பகுதிகளில் ஏராளமான வன
விலங்குகள், பறவைகள் உள்ளன.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள செந்தூரணி வன ஜீவி இயக்கம் சார்பில் கேரள காடுகளில் வசிக்கும் பறவை இனங்கள் குறித்து சர்வே நடத்தப்பட்டது. இந்த
ஆய்வுக்கு செந்தூரணி வன ஜீவி இயக்கத்தின் தலைவர் சஞ்சிவ்குமார், துணைத்தலைவர் டாக்டர் கைலேஷ் ஆகியோர் தலைமையில் இந்த ஆய்வு
நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் கேரள கல்லூரி மாணவ-மாணவிகள், பெங்களூரு வண்ணத்து பூச்சிகள் கிளப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வில் கேரள மாநிலத்தில்
உள்ள காடுகளில் 167 வகையான பறவை இனங்கள் இருப்பதும், 187 வகையான வண்ணத்து பூச்சி இனங்கள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் காட்டு நாய்கள், மரவெறுக்கு, நீர் நாய்கள், செங்கீரி ஆகியவற்றிலும் புதிய வகை இனங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டன. இந்த சர்வேயில் கேரள காடுகளில் 6 வகையான புதிய பறவை இனங்கள் மற்றும் 3 வகையான புதிய வண்ணத்து பூச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த புதிய வகை வண்ணத்து பூச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டதால் கேரள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்