Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் பிரசாரத்துக்கு, ஜாமின் கேட்கும் லாலு பிரசாத் யாதவ்

ஏப்ரல் 10, 2019 06:14

புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காகவே, 'ஜாமின்' கேட்பதாக, சி.பி.ஐ., தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பதில் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சி.பி.ஐ., தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: லோக்சபா தேர்தலில், தன் கட்சியை வழிநடத்தவும், பிரசாரம் செய்வதற்காகவும் தான், லாலு தரப்பில், 'ஜாமின்' மனு தாக்கல் செய்யப்படுகிறது. லாலுவை பார்க்க வந்தவர்களின் விபரத்தை பார்த்தாலே, இது புரியும். 

உடல் நிலையை காரணம் காட்டி, லாலு, தொடர்ந்து, மருத்துவமனையிலேயே இருந்து வருகிறார். 'ஜாமின்' வழங்கப்பட்டால், லாலு, தேர்தல் பணிகளில் ஈடுபடுவது உறுதி. இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்