Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்

மார்ச் 21, 2021 09:01

மதுரை:  திருமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வும் தற்போதைய அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முத்துராமலிங்கம் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்,மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, கம்பம் செல்வேந்திரன், திமுக நிர்வாகிகள் முன்னிலையில் முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார். கடந்த 1996 - 2001  தேர்தலில்திமுக சட்டமன்ற உறுப்பினராக திருமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து 2011 2016 திருமங்கலம் சட்டம் ஒரு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைப்புச்செய்திகள்