Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிக்கும், வியாபாரிக்கும் போட்டி- அன்புமணி

மார்ச் 21, 2021 10:24

அரக்கோணம்:அரக்கோணத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சு.ரவியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாய முதல்-அமைச்சர், அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மீண்டும் தமிழகத்தில் விவசாயி ஒருவர் முதலமைச்சராக வருவார்.இந்த பக்கம் முதல்வர் விவசாயியாகவும் எதிரே ஸ்டாலின் வியாபாரியாகவும் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த தேர்தல் விவசாயிக்கும், ஒரு வியாபாரிக்கு நடக்கின்ற தேர்தல் எனவே அனைவரும் விவசாயியை முதல்வர் ஆக்குவோம்.

தமிழகத்திற்கு அ.தி.மு.க. அரசு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக 40 ஆண்டுகள் நடந்த போராட்டத்திற்கு முடிவு தந்தவர் எடப்பாடியார்.அரக்கோணம் அ.தி.மு.க. வேட்பாளர் இந்த முறை வெற்றி பெற்றால் அமைச்சர் ஆகிவிடுவார்.இதன் மூலமாக அரக்கோணத்திற்கு மருத்துவக் கல்லூரியை அவர் நிச்சயம் கொண்டு வருவார் என்றார்.
 

தலைப்புச்செய்திகள்