Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினமும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்-கமிஷனர் பேட்டி

மார்ச் 21, 2021 10:28

பெங்களூரு:பெங்களூருவில் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுபோல, நகரில் உள்ள பூங்காக்களை மூடுவதற்கும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க அரசுடன் சேர்ந்து மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூருவில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினமும் 44 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. நாளை (அதாவது இன்று) முதல் தினமும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 50 ஆயிரம் பேருக்கு தினமும் தடுப்பூசி போடப்படும்.

பெங்களூருவில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்கள் என 300 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.பெங்களூருவில் கொரோனா தடுப்பூசி போடும் விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. போதுமான அளவுக்கு தடுப்பூசி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்று மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்