Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து கோவில்களுக்கு தனி வாரியம்-பாஜக தேர்தல் அறிக்கை

மார்ச் 22, 2021 04:46

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, விகே சிங் ஆகியோர் வெளியிட்டனர். மாநில பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு, பட்டியலின மக்களிடம் வழங்கப்படும். மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும்.விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோன்று, மீனவர்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் .5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படும் .இந்து கோவில்களின் நிர்வாகம் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் போடப்படும்
சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்