Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ம.பி.யில் பஸ்-ஆட்டோ மோதி விபத்து: 13 பேர் பலி

மார்ச் 23, 2021 07:43

குவாலியர்:மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள ஜவானி என்ற இடத்தில் அங்கன்வாடி பொது சமையல் கூடம் உள்ளது.இங்கு பணியாற்றிய பெண் ஊழியர்கள் இன்று காலை பணி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்தார்கள்.அப்போது எதிரே வந்த பஸ், ஆட்டோ மீது மோதியது. இதில் 12 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்