Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மு.க.ஸ்டாலின் -ராகுல் காந்தி வரும் 28ந்தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

மார்ச் 24, 2021 05:15

சென்னை:திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலத்தில் வரும் 28-ந்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்