Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசிக, பாமக மீண்டும் மோதல் போக்கு

ஏப்ரல் 10, 2019 07:23

சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் வாக்கு வங்கி இருக்கும் கட்சியாக பார்க்கப்படுவது பாமக . இந்த நிலையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குற்றம் சாட்டி ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் . அதில் தேர்தலில் தோல்வி பயத்தின் காரணமாக விசிக கட்சியினர் பாமக போட்டியிடும் தொகுதிகளில் வன்முறையை தூண்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மாதிரியான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்க செயல்கள் ஆகும் . தேர்தலை நேர்மையாகவும் , சுதந்திரமாகவும் நடைபெறவும் தோல்வி பயத்தில் கலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடும்  அவர்கள் மீது  சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இதனால்  மறுபடியும் பாமக விசிக கட்சியினர் இடையே ஒரு வித மோதல் போக்கு உருவாகும் சூழல் உருவாகியுள்ளது . இந்த போக்கை தடுக்கும் வகையில் காவல் துறையும் , தேர்தல் அணையும் செயல்பட வேண்டும் .  இரண்டு கட்சியினரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று தொகுதி மக்கள் கருதுகின்றனர் .  

 

 

தலைப்புச்செய்திகள்