Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி  புதுச்சேரியில் பிரசாரம்

மார்ச் 24, 2021 09:27

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 பேர் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.புதுச்சேரியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 30-ந்தேதி புதுச்சேரியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் வரும் வெள்ளிக்கிழமை புதுச்சேரி வருகிறார். அவர் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

மேலும் மத்திய மந்திரிகள், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்- மந்திரிகளும் புதுச்சேரி வந்து பிரசாரம் செய்ய உள்ளனர்.அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க.- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் வருகிற 3-ந்தேதி மு.க.ஸ்டாலின் புதுவையில் பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.அப்போது அவர் தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு புதுவை வருகிறார். புதுவையில் அவர் பிரசாரம் செய்கிறார். தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் செய்து வருகிறார்கள். தலைவர்கள் பிரசாரத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது

தலைப்புச்செய்திகள்