Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் - கனிமொழி

மார்ச் 24, 2021 04:52

திருச்சி: திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை  ஆதரித்து முதலியார் சத்திரம் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த  பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி : கருணாநிதி, ஸ்டாலின் நம்பிக்கையை பெற்றவர் இனிகோ இருதயராஜ் என்றும், இந்த தேர்தலில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் தமிழகர்களுக்கே வழங்கப்படும் என்றும்,  பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.திருச்சி நவல்பட்டு தொழில்நுட்ப பூங்கா கூடுதல் நிறுவனங்களுடன் நடைபெற நடவடிக்கை எடுப்பதாகவும்,  இதனால் திருச்சியில் வேலைவாய்ப்பு பெருகும் எனவும் அறிவித்தார்.  பூக்கள் சந்தை அமைக்கப்பட்டு, வாழை கொள்முதல் நிலையமும் அமைத்து தரப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். காந்தி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து,  ரிங்ரோடு பணிகள் முடிக்கப்படும் என்றும் அவர்  கூறினார்.

தலைப்புச்செய்திகள்