Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பிரசாரம்

மார்ச் 24, 2021 04:57

திருச்சி:மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ப.அப்துல்சமது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றிய பகுதிகளான இளங்காகுறிச்சி, குமாரவாடி, எளமணம், கல்பட்டி, நடுப்பட்டி, பொன்னம்பலம்பட்டி உள்ளிட்ட 65 கிராமங்களில், திமுக கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ப.அப்துல்சமது தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

தேர்தல் பரப்புரையை துவக்கிய அப்துல்சமதுக்கு, கிராமங்கள் தோறும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, மலர் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.  நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்