Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூருக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

மார்ச் 25, 2021 02:49

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரு நகரில் புதிய தொற்று அதிகரித்துள்ளது. நான்கு மாதங்களில் இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 1400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் வெளிமாநிலத்தவர்கள் பெங்களூருக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என மாநில சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் கே.சுதாகர் அறிவித்துள்ளார். பதிய கட்டுப்பாடுகள் குறித்து அவர் மேலும் கூறியதாவது:

வைரசால் பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தி எளிதில் அடையாளம் காண்பதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் கையில் முத்திரை குத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்ட அரங்குகளில் நடைபெறும் சமூக நிகழ்ச்சிகளில் 200 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திறந்தவெளி அரங்குகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம். அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிக்கப்படும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதிகள் கிடைப்பது குறித்த தகவல்களை ஆன்லைனில் பார்த்துக்கொள்ளலாம்.

மரபணு மாறிய வைரஸ் வேகமாக பரவி வருவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருடனும் தொடர்புடைய சுமார் 20 நபர்களுக்கு தொற்று இருந்ததை கண்டுபிடித்துள்ளோம்.பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 400 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். 
என்று கே.சுதாகர்  கூறினார்.

தலைப்புச்செய்திகள்