Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் நாளை வங்காளதேசம் பயணம்

மார்ச் 25, 2021 02:55

புதுடெல்லி:வங்காளதேச நாட்டின் சுதந்திர தினத்தின் 50-வது ஆண்டு விழா மற்றும் பங்கபந்துவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 17 முதல் மார்ச் 26-ந் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளுக்கு வங்காளதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு செல்கிறார். தேசிய தின நிகழ்ச்சியில் மோடி கவுரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மறுநாள் சத்திரா மற்றும் கோபால்கஞ்சின் ஒரகண்டியில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்.பின்னர் துங்கியாபாராவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் கல்லறையில் மரியாதை செலுத்த உள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு ஒரு ஆண்டு கழித்து பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
 

தலைப்புச்செய்திகள்