Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

மார்ச் 25, 2021 04:16

திருப்பூர்: மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், ஆடை உற்பத்தி துறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் இன்றும், நாளையும் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில் 250 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இது குறித்து உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறுகையில், மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் 2 நாட்கள், எலாஸ்டிக் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.

அனைத்து எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன. இப்போராட்டத்தால் ரூ.4 கோடி மதிப்பிலான 3 கோடி மீட்டர் எலாஸ்டிக் உற்பத்தி முடங்கும். ரப்பர், நூல் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. எனவே நாளை மறுநாள் 27-ந்தேதி முதல் எலாஸ்டிக் உற்பத்தியும் பாதியாக குறைக்கப்படுகிறது. எங்கள் துறையினரின் இன்னல்களை உணர்ந்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் எலாஸ்டிக்கிற்கு விலை உயர்வு வழங்க முன்வர வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்