Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலவச அரிசிக்கு பணம் வழங்க கவர்னர் ஒப்புதல்

மார்ச் 27, 2021 06:32

புதுச்சேரி:புதுச்சேரி கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மார்ச் மாதம் இலவச அரிசி வழங்க ரூ.600, வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்கு ரூ.300 என இலவச அரிசிக்கு மானியம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடியே 71 லட்சம் செலவின கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய நகர மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் உள்ளாட்சி துறையின் புதுச்சேரி நகர மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும் நகர அபிவிருத்தி தொடர் திட்டத்திற்கு ரூ.4 கோடியே 9 லட்சம் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார். 2019 மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் நகர்புறத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம், கிராமப்புறத்தில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரொக்க பணமும் வழங்கும் திட்ட செலவு ரூ.2 கோடியே 2 லட்சத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்