Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெண்டரை எடுத்து முதல்வர் ஆனவர் பழனிசாமி - எம்.பி  பேச்சு

மார்ச் 28, 2021 09:36

திருச்சி : டெண்டரை எடுத்து முதல்வர் ஆனவர் பழனிசாமி என எம்பி திருநாவுக்கரசு கூறினார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் எம்.பழனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசு, கடந்த 10 வருடம் நடந்த ஆட்சி எம்ஜிஆர் ஆட்சி என்று சொல்ல முடியாது. காரணம் அதிமுக வினர் எம்ஜிஆரை மறந்துவிட்டனர்.  ஜெயலலிதா இருந்தபோது பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு பயபடவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பயந்து கொண்டு, தேர்தலில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

இதனால் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடந்துவருகிறது. கடந்த 10 வருடமாக ஆட்சியில் இல்லாத திமுக, தேர்தல் வாக்குறுதி கொடுப்பது ஒரு அர்த்தம் உள்ளது. தமிழ்நாட்டில் இன்று பல கூட்டணி உள்ளது. அதில் வழுவான கூட்டணியாக திமுக இருக்கிறது. இந்த கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை நிரூபித்தன. அதிமுக கூட்டணி பலமானது என்று சொல்ல முடியாது.பஞ்சாயத்து தேர்தலில் வார்டு உறுப்பினராக கூட ஆகாதவர்கள் எல்லாம் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.

முதல்வர் பதவிக்கு எல்லாரும் ஆசைபடலாம். ஆனால் அதற்கு தகுதியானவர் என்று பார்த்தால் அது ஸ்டாலின்தான். ஜெயலலிதா இறந்த பிறகு ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து 4 வருடம் ஆகிறது, இதுவரை எந்த விளக்கமும் இல்லை. ஸ்டாலின் முதல்வரானதும் உரிய விசாரணை நடத்தபடும்.

ஜெயலலிதா இறந்த பின்னர் கூவத்தூரில் முதல்வர் பதவிக்கு டெண்டர் நடந்தது. அந்த டெண்டரை எடுத்து முதல்வர் ஆனவர் பழனிசாமி, இப்போது டெண்டர் முடிந்துவிட்டது இனி அவர் வீட்டிற்கு செல்லவேண்டியது தான் என பேசினார். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்