Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமர்நாத் யாத்திரை ஜூன் 28ல் தொடக்கம்

மார்ச் 28, 2021 05:01

ஜம்மு:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 28ல் தொடங்கி, ஆகஸ்ட் 22 வரை நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகளில் இந்த முன்பதிவை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த யாத்திரையின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 13 வயதுக்குட்பட்டவர்களும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணியரும், யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமர்நாத் பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர்  தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்