Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில்  மீண்டும் முழு ஊரடங்கு?  உத்தவ்வின் அதிரடி அறிவிப்பு

மார்ச் 29, 2021 12:12

மும்பை : மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் பொதுமக்களை மாஸ்க் அணிந்து சமூக விலகலை பின்பற்ற அந்த மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் குறைந்துவிட்டதால் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் மெத்தனமாக உள்ளனர். இதனை அடுத்து உத்தவ் தாக்கரே ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மக்களுக்கு எவ்வளவோ அறிவுரை கூறியும் அவர்கள் தொடர்ந்து அரசின் உத்தரவுகளை அலட்சியம் செய்து வருகின்றனர். பொது இடங்களில் பலர் முக கவசம் அணியாமல் இருக்கின்றனர்.

இதனால் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்படுவர். மேலும் மாநிலத்தின் ஏற்றுமதி குறையும். ஆனால் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மகாராஷ்டிராவில் மக்களின் நன்மை கருதி இதனை செய்ய வேண்டி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். உத்தவ் தாக்கரேவின் இந்த முழு ஊரடங்கு அறிவிப்பு பலரை வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்