Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்ச் 29, 2021 12:25

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில், நடனம் மூலம், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மத்திய ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது.நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில், லூர்து நாதன் சிலை முன்பாக, பள்ளி மாணவ, மாணவியர் ஐம்பது பேர்  பங்கேற்ற, ஆடல்- பாடல்-  நடனம் ஆகியவற்றின் மூலம், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மத்திய ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை,  டி.ஜே.பிளையர்ஷ் டான்ஸ் அகாடமியை சேர்ந்த, பள்ளி மாணவ மாணவிகள், மொத்தம் ஐம்பது பேர், ஆடல், பாடல்களுடன், நடனமும் ஆடி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திரிடூஒன்டூ (3212) ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் " மயில்" டி.பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்