Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார்லிமெண்ட் டைகர் போட்டியிடும் தொகுதி தெரியுமா ?: ஸ்டாலின்

ஏப்ரல் 10, 2019 09:33

தூத்துக்குடி: இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஸ்டார் தொகுதியில் ஒன்றாக தூத்துக்குடி இருக்கிறது . இந்த தொகுதியில் கலைஞர் அவர்களின் மகளும் , இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராகவும் உள்ள கனிமொழி போட்டியிடுகிறார் இவரை எதிர்த்து அதிமுக , பாஜக  கூட்டணி சார்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் போட்டியிடுகிறார் .  

கனிமொழியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது  கனிமொழி எல்லாவற்றையும் தாண்டி சமூக போராளியாக வளர்ந்திருக்கிறார். 'பார்லிமெண்ட் டைகர்' என்ற பட்டத்தை கனிமொழி பெற்றிருக்கிறார். தூத்துக்குடிக்கும் ஒரு டைகராக கிடைத்திருக்கிறார். சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பட்டத்தை பெற்றவர். 2007 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கட்சிக்காகவும் சமூகத்துக்காகவும் நிறைய  பணிகளை செய்துள்ளார் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

தலைப்புச்செய்திகள்