Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஸ்போர்ட் தர மறுக்கிறார்கள்: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

மார்ச் 29, 2021 02:07

ஸ்ரீநகர், மார்ச்.30: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
‘சிஐடி அறிக்கையின் அடிப்படையில் எனது பாஸ்போர்ட்டை வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துவிட்டது. சிஐடி அறிக்கையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் வைத்திருக்கும் முன்னாள் முதலமைச்சர், ஒரு வலிமைமிக்க தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள்.

இதுதான், ஆகஸ்ட் 2019-க்கு பிறகு காஷ்மீரில் திரும்பிய இயல்பு நிலை’ என மெகபூபா கூறி உள்ளார்.2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையில், நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களுடன் மெகபூபா முப்தியும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்