Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம்- பிரதமர் மோடி

மார்ச் 30, 2021 01:47

தாராபுரம்:தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன், ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசினர்.

பின்னர்  பிரதமர் மோடிக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது.பிரதமர் மோடிக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து வெற்றி வேல் வீர வேல் என கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி,தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜகவுக்கு வளர்ச்சிதான் முக்கியம். ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம்.

திமுக காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள். முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக அவமதித்தது கண்டிக்கத்தக்கது.பெண்கள் குறித்து திமுகவின் திண்டுக்கல் லியோனியும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார்.ஒரு வேளை திமுக-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் இன்னும் பெண்களை இழிவுபடுத்துவார்கள். திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தங்கள் கட்சி தலைவர்களை கட்டுப்படுத்துங்கள்.திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம்  கட்டப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி பேசினார்.

தலைப்புச்செய்திகள்