Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி- இ.பி.எஸ் புகழாரம்

மார்ச் 30, 2021 01:48

தாராபுரம்:தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளது. நல்ல கட்சிகள் இணைந்து சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளோம்.தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி.மக்கள் நலனுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பவர் பிரதமர் மோடி.மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான உறவு இருக்க வேண்டும். மத்திய அரசோடு இணக்கமான உறவு இருந்தால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியும்.

கேட்கும்போது எல்லாம் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொடுக்கிறது மத்திய பாஜக அரசு.சாலை பணி திட்டத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி.தடையில்லா மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பால் முதலீடு குவிகிறது.ரூ.1125 கோடி மதிப்பில் திருப்பூரில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தியாவை இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ். திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.என்று பழனிச்சாமி கூறினார்.

தலைப்புச்செய்திகள்