Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலவசங்களை வழங்கும் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது? -உயர்நீதிமன்றம் கேள்வி

மார்ச் 31, 2021 09:15

மதுரை:உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதாவது:இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறியாக்காமல் அவர்களின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும். சமூக நலத்திட்டங்கள் எனும் பெயரில் மக்களை சோம்பேறியாக்கும் வகையில் அறவிப்புகளை வழங்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக்கூடாது? 

பிரியாணி, மதுபாட்டிலுக்காக மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்கிறார்கள்.
வாக்குகளை விற்பனை செய்தால் நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி
எதிர்பார்க்க முடியும்? இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன்பெறுவதால் மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது. நிதிச்சுமையை ஈடுகட்ட மதுக்கடைகள்  அறிவிப்பு என காரணம் காட்டப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்