Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஷேக் ஹசீனாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் - வைரலாகும் புகைப்படம்

மார்ச் 31, 2021 09:16

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் வங்கதேச சுற்றுப்பயணத்தை சமீபத்தில்
மேற்கொண்டு நாடு திரும்பினார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ஷேக்
ஹசீனாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் ஷேக் ஹசீனா மற்றும் சோனியா காந்தி
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் கோணத்தில் அமர்ந்து இருக்கின்றனர்.

இவர்களுடன் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களுடன் அமர்ந்து
இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை
சோனியா காந்தி வங்கதேச நாட்டுக்கு சுற்று பயணம் அழைத்து சென்றார் எனும்
தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படம் அக்டோபர் 2019 வாக்கில் எடுக்கப்பட்டது ஆகும்.

இந்த சந்திப்பு புது டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஷேக் ஹசீனாவை சந்தித்த போது எடுக்கப்பட்டது ஆகும். சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி முக்கிய இருக்கையில் அமர்ந்தார் என கூறப்படுகிறது. அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் வங்கதேச சுற்று பயணத்தின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. மேலும் காங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில் சோனியா காந்தி முக்கிய இருக்கையில் அமர்ந்தார் என்பது தெளிவாகி இருக்கிறது.போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

தலைப்புச்செய்திகள்